திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் இறந்து கிடந்த மயில்
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் மயில் இறந்து கிடந்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் ஏராளமான மயில்கள் வசித்து வந்தன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஆபூர்வமாக ஒரு வெள்ளை மயில் காணப்பட்டது. நாளடைவில் வண்ணமயில்களுடன் 3 வெள்ளை மயில்கள் வசித்து வந்தன. நாளடைவில் இரை தேடி சென்ற மயில்கள் தன் இருப்பிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து சென்றுவிட்டது. இதனால் மயில்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று கிரிவலப்பாதையில் சுற்றுச்சூழல் பூங்கா அருகே தேசிய பறவையான ஒரு மயில் திடீரென்று இறந்துகிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று இறந்துகிடந்த மயிலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். நாய்கள் கடித்து மயில் இறந்துபோனதா? கிரிவல சாலையை கடக்க முயன்றபோது வாகன விபத்துக்கு உள்ளாகி இறந்துபோனதா? என்பது தெரியவில்லை. இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.