கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை


கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

ரயில் நிலையங்களில் அந்த ஊர்களின் பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை செய்வதற்கு ஏ. கே. ஆர். கடலை மிட்டாய் தயாரிப்பாளர் ஆர். மாரிச் சாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கடலை மிட்டாய் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ரயில்வே வர்த்தகப் பிரிவு அலுவலர் கே. கொண்டல்சாமி, விருதுநகர் வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், ரயில் நிலைய அதிகாரி மகாராஜ் சிங் மீனா, ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர். மாரிச்சாமி வரவேற்றுப் பேசினார். முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் எம். ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஏ. கார்த்தீஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சங்க செயலாளர் கே. என். ஆர். கண்ணன், பொருளாளர் தினேஷ் ரோடி, சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஆர். மணி சங்கர் நன்றி கூறினார்.


Next Story