பேச்சியம்மன் கோவில் கொடை விழா


பேச்சியம்மன் கோவில் கொடை விழா
x

செங்கோட்டை அருகே கணக்கபிள்ளைவலசை பேச்சியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசை பேச்சியம்மன் கோவில் கொடைவிழா நேற்று முன்தினம் இரவு குடி அழைப்புடன் தொடங்கியது. நேற்று காலை சக்தி விநாயகா் கோவில் முன்பு இருந்து குற்றாலத்தில் தீர்த்தம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், இரவு 12 மணிக்கு பேச்சியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சாமக்கொடை பூஜைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று காலை அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனா்.


Next Story