நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து
நாச்சியார் கோவில் அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒலி முகமது மகன் அனாஸ் (வயது21), மேலக்காவேரி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த தாசின் மகன் மூசா (17). இவர்கள் இருவரும் திருநறையூரில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மன்னார்குடி லட்சுமணங்குடி கம்பர் தெருவை சேர்ந்த வரத்தான் மகன் கார்த்தி (32), உடையார்பாளையம் கருட கம்பர் தெருவை சேர்ந்த பாலு மகன் கோபு (32), அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பாலு மகன் சூர்யா (21), அமீர்ஜான் மகன் இம்ரான் (23). டிரைவர். இவர்கள் 4 பேரும் சொகுசு காரில் உடையார்பாலையத்தில் இருந்து புறப்பட்டு உறவினர் கார்த்திக்கை லட்சுமணங்குடியில் விடுவதற்காக வந்தனர். அப்போதுதிருநறையூரில் நடந்து சென்று கொண்டிருந்த அனாஸ், மூசா ஆகிய 2 பேர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்தவர்களும், நடந்து சென்றவர்களும் என 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றளனர். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.