பேனா நினைவுச் சின்னம் : எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எதிர்ப்பவர்களின் வன்மத்தை காட்டுகிறது. இந்த சின்னம் அமைப்பதற்காக, அரசியல் காரணங்களுக்காகவே அதை எதிர்க்கிறார்கள்”
சென்னை,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் 'பேனா நினைவுச் சின்னம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது,
தமிழ்நாடு இன்று கல்வி, மருத்துவம், தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் முதன்மையாக விளங்க கருணாநிதியின் பங்கு முக்கியமானது. அதனால் அவரின் நினைவாக பேனா சின்னத்தை கடலில் வைப்பதில் தவறில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறேன்.
எதிர்ப்பவர்களின் வன்மத்தை காட்டுகிறது. இந்த சின்னம் அமைப்பதற்காக, அரசியல் காரணங்களுக்காகவே அதை எதிர்க்கிறார்கள்"
Related Tags :
Next Story