கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றவர்களுக்கு அபராதம்
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
மயிலாடுதுறை
குத்தாலம்
குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு கடைவீதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா?, அயோடின் கலக்காத உப்பு விற்கப்படுகிறதா? என்று குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், குத்தாலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒருசில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story