ரேஷன் கடை ஊழியருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம்


ரேஷன் கடை ஊழியருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:45 AM IST (Updated: 30 Dec 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே அரிசி இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் அருகே அரிசி இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரேஷன் கடைகளில் ஆய்வு

திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடைகளில் எடை எந்திரம் சரியாக இயங்குகிறதா? என பார்வையிட்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களையும் பார்வையிட்டார்.

அபராதம்

ஆய்வின்போது தண்டலை ஊராட்சி விளமல் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் புழுங்கல் அரிசி 1,050 கிலோ கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடை விற்பனையாளருக்கு ரூ.26 ஆயிரத்து 250 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, தாசில்தார் நக்கீரன், வட்டவழங்கல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story