தாமதத்துக்கான அபராத தொகையை குறைக்க வேண்டும்
தாமதத்துக்கான அபராத தொகையை குறைக்க வேண்டும்
குன்னூர்
குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு உரிய வாடகையை வியாபாரிகள் நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் திடீரென வாடகை உயர்த்தப்பட்டது.
இது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் உயர்த்திய வாடகையை செலுத்தாமல் உள்ள வியாபாரிகளுக்கு கால அவசாசம் வழங்கி வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலர்களிடம் வியாபாரிகள் வாடகையை கட்ட சென்றனர். அப்போது ஜி.எஸ்.டி., கால தாமதத்துக்கான அபராத தொகை என கூடுதலாக பணம் கட்ட கூறியதாக தெரிகிறது. இதனால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் காலதாமதத்துக்கான அபராத தொகையை குறைக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.