அதிக பாரம் ஏற்றிய 16 கனரக வாகனங்களுக்கு அபராதம்


அதிக பாரம் ஏற்றிய 16 கனரக வாகனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அதிக பாரம் ஏற்றிய 16 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அதிக பாரம் ஏற்றிய 16 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிகாரிகள் சோதனை

குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் கண்காணித்து பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு அலுவலர்கள் குழு நேற்றுமுன்தினம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 37 கனரக வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில் 7 கனரக வாகனங்கள் அதிகளவில் பாரத்துடன் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதில்

3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 வாகன உரிமையாளர்களுக்கும் தலா ரூ.45 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, வீரமார்த்தாண்டபுரம் மற்றும் குமாரபுரம் கிராமங்களிலும் வாகன சோதனை நடைபெற்றது.

வாகனங்கள் பறிமுதல்

இதேபோல தனி தாசில்தார் (நிலம் கையகப்படுத்துதல்) சேகர் தலைமையிலான சிறப்புக் குழுவினர் மணலி, படந்தாலுமூடு, செங்கவிளை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 9 வாகனங்கள் அதிக அளவு கனிம வளம் ஏற்றி சென்றதும் கண்டறியப்பட்டது. அந்த வாகன உரிமையாளர்கள் மீதும் அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story