ஆம்னி பஸ், லாரி உள்பட 4 வாகனங்களுக்கு அபராதம்


ஆம்னி பஸ், லாரி உள்பட 4 வாகனங்களுக்கு அபராதம்
x

ஆம்னி பஸ், லாரி உள்பட 4 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி


திருச்சி கொள்ளிடம் சோதனை சாவடியில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமதுமீரான் ஆகியோர் தலைமையில் கடந்த 11-ந் தேதி இரவு அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த வழியாக சென்ற ஆம்னி பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. 35 வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டதில் வரி செலுத்தாமல் இயங்கிய பொக்லைன் எந்திரம், லாரிக்கு ரூ.99 ஆயிரமும், தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிய ஆம்னி பஸ்சுக்கு ரூ.25 ஆயிரமும், மற்ற வாகனங்களுக்கு ரூ.5,500 என 4 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story