பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம்
நெல்லை மாநகரில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
நெல்லை டவுன் பகுதிகளில் பல கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் இருந்து 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story