6 கடைகளுக்கு அபராதம்


6 கடைகளுக்கு அபராதம்
x

பாளையங்கோட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு அபராதம்

திருநெல்வேலி

நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரலிங்கம் அடங்கிய குழுவினர் தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள 5 கடைகளில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 கடைகளிலும் வியாபாரத்துக்கு தடை விதித்து, உடனடியாக வியாபாரம் நிறுத்தப்பட்டு மூடப்பட்டது. இவர்களிடம் இருந்து 1 கிலோ 71 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேபோல் வண்ணார்பேட்டையில் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையில் வியாபாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.


Next Story