கம்பத்தில் பேக்கரி கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


கம்பத்தில் பேக்கரி கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 Feb 2023 2:00 AM IST (Updated: 7 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பேக்கரி கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி

கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகள், பேக்கரி கடைகள் உள்ளன. இதில் பேக்கரி கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் மீது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் அவை விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலர் ராகவன் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிற்கு புகார் வந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன் (கம்பம்), ஜனகர் (ஆண்டிப்பட்டி), சுரேஷ்கண்ணன் (சின்னமனூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் கம்பம் நகர் பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 4 பேக்கரி கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது. இதையடுத்து அந்த உணவு பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பேக்கரி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story