கூரியர் நிறுவனத்துக்கு அபராதம்


கூரியர் நிறுவனத்துக்கு அபராதம்
x

சேவை குறைபாடு காரணமாக கூரியர் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் நோயல் செல்வவிநாயகம் (வயது 76). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி நெல்லையில் உள்ள தனியார் கூரியர் மூலமாக கோவையில் உள்ள ஒரு அமைப்பிடம் மருத்துவ சிகிச்சை உதவி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் கோவையில் உள்ள அவர்களின் கிளை அலுவலகம் 23 நாட்கள் கழித்து கடிதத்தினை கொடுத்துள்ளது.

இதனால் மருத்துவ உதவி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிளாட்சன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் நோயலுக்கு ஏற்பட்ட சேவை குறைபாட்டிற்கு ரூ.20 ஆயிரம், மருத்துவ உதவித்தொகை ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.2 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.32 ஆயிரத்தை அந்த கூரியர் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Next Story