திருவெண்ணெய்நல்லூரில் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராமல் சென்றால் நடவடிக்கை 3 டிரைவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரி எச்சரிக்கை


திருவெண்ணெய்நல்லூரில்    பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராமல் சென்றால் நடவடிக்கை    3 டிரைவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராமல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூரில் உள்ள பஸ்நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்லாமல், அணைக்கட்டு சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு சென்று வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் திருவெண்ணெய்நல்லூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருக்கோவிலூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் மார்க்கத்திற்கு திருவெண்ணெய்நல்லூர் வழியாக சென்ற பஸ்களில் 1 அரசு பஸ், 2 தனியார் பஸ்கள் திருவெண்ணெய்நல்லூர் பஸ்நிலையத்துக்குள் வராமல் சென்றது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பஸ்களை நிறுத்தி, தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்ததுடன், டிரைவர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். பஸ்நிலையத்துக்குள் வராமல் சென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர்.

இதேபோன்று, அந்த வழியாக வந்த பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மணவர்களுக்கும், உரிய அறிவுரைகளை வழங்கி, இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள கூடாது என்று தெரிவித்தனர்.


Next Story