கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம்


கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:12 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோடை காலத்தை சமாளிக்க குடிநீர் மற்றும் தெருவிளக்கு, சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மேம்பாடு செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சியில் ஜூன் மாதம் முதல் பொதுமக்கள் குப்பைகளை பொதுஇடங்களில் கொட்டாமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தங்கள் தெருக்களுக்கு வரும் நகராட்சி ஊழியரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மரக்கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது. நகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் ஏற்றி விடவேண்டும். இதை மீறி ெபாது இடங்களில் கொட்டினால் நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் என்றார். கூட்டத்தில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story