வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அபராதம்


வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அபராதம்
x

வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

மொரப்பூர்:-

மொரப்பூர் வனச்சரகம் பூதநத்தம் பிரிவு மூக்கனூர் வனக்காவல் சுற்று உனிசேனஅள்ளி காப்புக்காட்டில் வனப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றும்படி அவர்களுக்கு வனத்துறை அறிவிப்பு செய்தது. அப்படி இருந்தும் அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாயம் செய்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனவர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சந்திரன் என்பது தெரிய வந்தது. மாவட்ட வன அலுவலர் அப்பாலநாயுடு முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story