ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்


ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
x

நெல்லையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பழையபேட்டை சோதனைச்சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளக்கரை, டவுன் ஆர்ச், மாநகராட்சி அலுவலகம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதி, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளை. மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 50 இடங்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை மறித்து அபராதம் விதித்தனர். ரூ.100 முதல் ரூ.1,000 வரை வாகன ஓட்டிகளிடம் அபராதமாக வசூலித்தனர். இதேபோல் வாகனத்தில் முறையாக நம்பர் பிளேட் பொருத்தாதவர்கள், விதிமுறைகளை மீறியவர்கள், 2-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் உள்பட விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

நெல்லை பொருட்காட்சி திடல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்தனர். அப்போது போலீசார் மறித்தபோது அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை போலீசார் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்களை சந்திப்பு மேம்பாலத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.


Next Story