வீட்டில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்திருந்தவருக்கு அபராதம்
வீட்டில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்திருந்தவருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்
ஓமலூர்:
ஓமலூர் அருகே வெள்ளார் சின்ன கம்மம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவர் தனது வீட்டில் காட்டுப்பன்றி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதாக டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் தங்கராஜ் மற்றும் வனத்துறையினர் கோவிந்தராஜ் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது. அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரை விசாரணைக்காக டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் காட்டுப்பன்றி இறைச்சியை குழித்தோண்டி புதைத்தனர்.
மேலும் கோவிந்தராஜ்க்கு காட்டுப்பன்றி இறைச்சி எப்படி கிடைத்தது? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story