சாலையோரம் குப்பைகளை கொட்டினால் அபராதம்


சாலையோரம் குப்பைகளை கொட்டினால் அபராதம்
x

சாலையோரம் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 44-வது வார்டு டோல்கேட் முத்தண்ணாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய், சாலை பணிகளை மேயர் சுஜாதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், கால்வாய் மற்றும் சாலை பணிகளை உரிய காலத்திற்குள் தரமாக செய்து முடிக்கும்படி ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை முறையாக வாங்கி செல்கிறார்களா என்று கேட்டறிந்தார். அங்குள்ள சில சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. இதைக்கண்ட மேயர் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் சாலையோரம் குப்பைகளை கொட்டக் கூடாது. அவற்றை மாநகராட்சி ஊழியர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். சாலையோரம் குப்பைகளை கொட்டினால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்படும். வீடுகள்தோறும் குப்பைகள் வாங்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர் தவமணி தாமோதரன், மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிபொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story