வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்சுக்கு அபராதம்


வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்சுக்கு அபராதம்
x
தினத்தந்தி 5 Jan 2023 1:00 AM IST (Updated: 5 Jan 2023 3:51 PM IST)
t-max-icont-min-icon

வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவில் அருகே ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற புதுச்சேரி மாநில ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதில் ஆவணங்களை சரிபார்த்தபோது, வரி செலுத்தாமலும், மாநில அனுமதியின்றியும் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆம்னி பஸ் டிரைவரிடம் ரூ.36 ஆயிரத்து 674 அபராதமாக வசூலிக்கப்பட்டது.


Next Story