கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு லாரி உரிமையாளருக்கு அபராதம்


கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு லாரி உரிமையாளருக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அனுமதியின்றி செயல்பட்ட கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு லாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சிக்குட்ட பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் லாரிகள், நகராட்சியில் உரிய அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் அனுமதி பெறாமல் திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட லாரியை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அதன் உரிமையாளர் மாடசாமிக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story