தரமற்ற பொருட்களை விற்ற உரிமையாளர்களுக்கு அபராதம்


தரமற்ற பொருட்களை விற்ற உரிமையாளர்களுக்கு அபராதம்
x

நெல்லையில் தரமற்ற பொருட்களை விற்ற உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் கோடைக்காலங்களில் விற்பனை செய்யப்படும் ஜுஸ், கரும்புச்சாறு, சர்பத் கடைகளில் தரமற்ற எலுமிச்சை பழங்கள், கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்துவதாகவும், அழுக்கடைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் புகார் கூறினர்.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் நேற்று நெல்லை டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 81 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூ.6 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் அரசு உத்தரவை மீறி பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story