ரவை பாக்கெட்டுக்கு ரூ.1 அதிகமாக வசூலித்த தனியார் மார்க்கெட்டுக்கு அபராதம்


ரவை பாக்கெட்டுக்கு ரூ.1 அதிகமாக வசூலித்த தனியார் மார்க்கெட்டுக்கு அபராதம்
x

ரவை பாக்கெட்டுக்கு ரூ.1 அதிகமாக வசூலித்த தனியார் மார்க்கெட்டுக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

நெல்லை ஊருடையார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளபாண்டி. இவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மார்க்கெட்டில் ரவை பாக்கெட் வாங்கினார். அதில் 1 வாங்கினால் 1 இலவசம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் வாங்கியதில் ஒரு பாக்கெட் விலை ரூ.43 என்று குறிப்பிட்டு விற்பனை செய்து விட்டு, கூடுதலாக ஒரு ரூபாய் சேர்த்து ரூ.44 என பில்லில் குறிப்பிட்டு விற்பனை செய்தனர்.

இதுதொடர்பாக வெள்ளபாண்டி வக்கீல் பிரம்மநாயகம் மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை சரித்த நீதிபதி கிளாட்சன் பிளஸ்சட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், சம்பந்தப்பட்ட மார்க்கெட் வெள்ளபாண்டிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.1,000 மற்றும் கூடுதலாக வசூலித்த ஒரு ரூபாயுடன் சேர்த்து மொத்தம் ரூ.6,001-ஐ வழங்க உத்தரவிட்டனர்.


Next Story