முயல் வேட்டையாடியவருக்கு அபராதம்


முயல் வேட்டையாடியவருக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே முயல் வேட்டையாடியவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

தென்காசி

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரகம் கடையம் பீட்டின் வெளி மண்டல பகுதியான ஆவுடையானூர் கிராமத்தில் வேட்டை நாய்கள் வைத்து காட்டு முயல்களை வேட்டையாடி வருவதாக கடையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையம் வனச்சரகர் கருணா மூர்த்தி தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆவுடையானூர் சீராடியூர் பகுதியை சேர்ந்த செல்லமணி மகன் ஜெயராமன் (வயது 33) என்பவர் வேட்டை நாயை வைத்து முயலை வேட்டையாடியது தெரிய வந்தது. அவரை கையும் களமாக பிடித்து அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் படி அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.


Next Story