புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x

கண்ணமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பகுதியில் இன்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாரதி தலைமையில், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் புனிதலேலன், சுகாதார ஆய்வாளர்கள் வேலாயுதம், அண்ணாமலை, ஜவஹர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர்,

கண்ணமங்கலம் பகுதியில் சிறிய பெட்டிக்கடை மற்றும் பங்க் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.


Next Story