உயரமான பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
வேலூரில் உயரமான பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக செல்லும் லாரிகள் உயரமான பாரங்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.
இவ்வாறு செல்லும் லாரிகளால் ஆந்திர எல்லை பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் உள்ள சிக்னல்கள் மற்றும் ஒயர்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில் ஆந்திரமாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு மரக்கட்டைகளை லாரிகளில் விதிகளை மீறி கொண்டு செல்வது ெதரிய வந்தது.
இதையடுத்து இன்று அதிக உயரம் மற்றும் அகலமாக மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு 6 லாரிகளை விருதம்பட்டு அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மடக்கி பிடித்து 6 லாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.18 ஆயிம் அபராதம் விதித்தார்.
மேலும் இதுபோன்று விதியை மீறி பாரம் ஏற்றி வரக்கூடாது என எச்சரித்து அனுப்பினார்.
Related Tags :
Next Story