விதிமுறைகளை மீறி ஓடிய வாகனங்களுக்கு அபராதம்


விதிமுறைகளை மீறி ஓடிய வாகனங்களுக்கு அபராதம்
x

வாணியம்பாடியில் விதிமுறைகளை மீறி ஓடிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலை மற்றும் நாட்டறம்பள்ளி சாலையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராமன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சாலை வரி செலுத்தாத மற்றும் காற்றொலிப்பான் பயன்படுத்திய டிப்பர் லாரி, கிரேன், ஜீப் என 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் மற்றும் நிலுவை வரி என ரூ.50 ஆயிரம் வசூலித்தனர்.

அதிக சத்தம் ஏற்படுத்தும் காற்றொலிப்பான் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story