வீதப்பட்டியலை மாற்றி பயன்படுத்திய 11 மின் இணைப்புகளுக்கு அபராதம் விதிப்பு


வீதப்பட்டியலை மாற்றி பயன்படுத்திய 11 மின் இணைப்புகளுக்கு அபராதம் விதிப்பு
x

வீதப்பட்டியலை மாற்றி பயன்படுத்திய 11 மின் இணைப்புகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் அம்பை நகர்ப்புற பிரிவு அலுவலகத்தில் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் பெருந்திரள் மின்னாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை நெல்லை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளர் (பொது) சைலஜா, உதவி மின்பொறியாளர் (பொது) ஜெனட் மல்லிகா ஆகியோர் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மின்வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட வீதப்பட்டியலை முறைகேடாக மாற்றி பயன்படுத்திய 11 மின்னிணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்காக ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 698 அபராத தொகை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சரியான வீதப்பட்டியல் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது.


Next Story