விற்பனையாளருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம்
ரேஷன் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம்
ஆம்பூரை அடுத்த சாணாங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் சுந்தரவிநாயகர் கோவில் அருகே ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மாதனூரை அடுத்த மராட்டி பாளையத்தை சேர்ந்த ரவணய்யன் என்பவர் விற்பனையாளராக உள்ளார். கடந்தசில நாட்களுக்கு முன்பு இந்த ரேஷன் கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது கடையில் ரேஷன் அரிசி இருப்பு குறித்து பதிவேட்டில் குறிப்பிட்டு இருந்ததைவிட 900 கிலோ குறைவாக இருப்பது தெரியவந்தது. எனவே அதிகாரிகள் அந்த கடையில் உள்ள அனைத்து ரேஷன் பொருட்களையும் சரி பார்த்தனர்.
இதை தொடர்ந்து ரேஷன் கடையில் பதிேவடுகளை உரிய வகையில் பராமரிக்காதது, ரேஷன் அரிசி முறைகேட்டில் ஈடுபட்டது ஆகிய காரணங்களுக்காக விற்பனையாளர் ரவண்ய்யனுக்கு ரூ.29 ஆயிரத்து 475 அபராதம் விதிக்கப்பட்டது. தாசில்தார் பத்மநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.