நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்


நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

போலீஸ் நிலையங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்

பாபநாசம்:

போலீஸ் நிலையங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் ஊரக உட்கோட்ட எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகளுக்கான கலந்தாய்வு கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பாபநாசம் ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது கோவில்களில் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறுவதால், அதில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சாலை போக்குவரத்து விதிகள்

சாலை போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கரிகால் சோழன்(அம்மாப்பேட்டை), கலையரசி (பாபநாசம்), அனிதா கிரேசி (கபிஸ்தலம்), வனிதா(அய்யம்பேட்டை), பாபநாசம் அனைத்து மகளிர் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story