நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்


நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென முதன்மை செயலாளர் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென முதன்மை செயலாளர் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதன்மைச் செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை பணியாளர்களின் விவரங்கள், கருணை அடிப்படையில் நியமனங்கள், நிலம் ஆக்கிரமிப்பு, நிலம் கையகப்படுத்தியது, இ-ஆபிஸ் பணிகள், இ- சேவை மையங்களின் மூலமாக வழங்கப்படும் இ-சான்றிதழ்கள், பேரிடர் மேலாண்மை குறித்த விவரங்கள், மழையளவு, ஆண்டியப்பனூர் அணையின் கொள்ளளவு, தேர்தல் பிரிவு பணிகள், சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பிட்ட காலத்திற்குள்

அப்போது முதன்மை செயலர் பேசுகையில் நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். ஆலங்காயம் அரசு பள்ளியில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு அனுப்பப்படுகின்ற கருத்துருக்களை தெளிவாக அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்டம் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையன், மோகனசுந்தரம், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story