ஓவியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
ஓவியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
திருவாரூர்
திருவாரூரில் தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் கூட்டம் மாவட்ட சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்திராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சரபோஜி, மாவட்ட துணை செயலாளர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஓவியர்கள் அனைவரையும் சங்கத்தில் இணைத்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி நல வாரியத்தின் மூலம் சலுகைகள் பெற்று தருவது. கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல் ஓவியர்களுக்கு வீடு கட்ட மானியத்தில் கடன் வசதி வழங்க வேண்டும். ஓவியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story