ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14-ந் தேதி நடக்கிறது


ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14-ந் தேதி நடக்கிறது
x

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடக்கிறது/

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் ஓய்வூதிய பலன்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி நடைபெற உள்ளது. கூட்டம் கலெக்டர் மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலையில் நடைபெற உள்ளது. ஓய்வூதிய பலன்கள் குறித்த குறைகள் ஏதேனும் இருப்பின், மனு செய்ய விரும்புவோர் உரிய கோரிக்கை படிவத்தில், மனுதாரர் பெயர் மற்றும் முகவரி, ஓய்வூதிய ஆணை எண், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பெயர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கடைசியாக பணிபுரிந்த பதவி மற்றும் அலுவலகம், அரசு அலுவலர் ஓய்வு பெற்ற தேதி, இறந்த தேதி, தீர்வு செய்ய வேண்டிய கோரிக்கையின் விவரம், இதற்கு முன் மனு செய்திருந்தால் அதன்விவரம், எந்த அரசு அலுவலரால் கோரிக்கை தீர்வு செய்யப்பட வேண்டும் போன்றவற்றை தெளிவாக எழுதி அதனை தவறாமல் இரட்டைப்பிரதிகளில் வருகிற 30-ந் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்பி வைத்திட கலெக்டர் கவிதாராமு தெரிவித்து உள்ளார்.


Next Story