தபால் நிலையங்களில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு


தபால் நிலையங்களில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ்   சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஓய்வூதியதாரர்கள்

அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் தி்ட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் பல ஓய்வூதியதாரர்கள் கைரேகை பதிவு செய்து ஆயுள் சான்று சமர்ப்பிதது உள்ளனர். இந்த ஆண்டு தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை அவர்களின் வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆயுள் சான்று

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் செப்டம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தபால் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சர்ப்பிக்க முடியும். தபால் காரரை அணுக முடியாதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

மேலும் வெளியில் செல்ல முடியாத ஓய்வூதியதாரர்கள் 0461-2377233 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கோரிக்கையை பதிவு செய்தால், உங்கள் பகுதி தபால் அதிகாரி, தபால்காரர் மூலம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story