ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 1-1-2022 முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் மற்றும் 80 வயது முடிந்தவர்களுக்கு மேலும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்த உள்ள நிலையில் காசில்லா மருத்துவ திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கை கடிதத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீதுவிடம் கொடுத்து முறையிட்டனர்.

-------


Next Story