ஓய்வூதியர்கள் நேர்காணல் செய்ய 30-ந் தேதி கடைசி நாள்


ஓய்வூதியர்கள் நேர்காணல் செய்ய 30-ந் தேதி கடைசி நாள்
x

ஓய்வூதியர்கள் நேர்காணல் செய்ய 30-ந் தேதி கடைசி நாள்

திருப்பூர்

திருப்பூர்

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கு உண்டான கால அளவு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஆகும். திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் (சார்நிலை கருவூல அலுவலகங்கள் உள்பட) இதுவரை 2 ஆயிரத்து 508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர். காலக்கெடு முடிய குறைவான நாட்களே உள்ளன. எனவே ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு இதுவரை ஆண்டு நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னணு வாழ்நாள் சான்றை ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக இந்திய தபால்துறை வங்கி, இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென்றும் நேர்காணல் புரியலாம். மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க ஆதார் எண், பி.பி.ஓ எண், வங்கி கணக்கு எண், செல்போன் ஓ.டி.பி. தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.


Next Story