தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x

தாராபுரத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

குண்டடம்

தாராபுரத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மயானம் ஆக்கிரமிப்பு

தாராபுரம் 3-வது வார்டு மேற்க தெருவில் ஆதிதிராவிடர் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை ஆதி திராவிடர் மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயானத்திற்கு செல்லும் பாதை மற்றும் மயானத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்வதற்கு போதிய பாதை இல்லாமலும், உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்தை சுற்றியுள்ள நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். மேலும் ஏற்கனவே மயானத்தில் உள்ள கல்லறைகளை இடித்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே மயான ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி செய்து தருமாறு அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். அதன்படி அந்த கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் மயானம் மற்றும் மயான பாதை ஆக்கிரமிப்பை ஆய்வு ெசய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஏதுவாக மயானம் மற்றும் மயான பாதை முழுவதும் உள்ள நிலங்களை நில அளவையாளர் கொண்டு அளந்து எல்லை வரையறை செய்து எல்லை கற்கள் நடப்பட்டன.

தர்ணா

ஆனாலும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை, எனவே கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்தனர். ஆனால் மனுக்களை வாங்குவதற்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜலஜா இல்லாததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். உடனே தாலுகா அலுவலக நுழைவாயிலில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து வந்த தாசில்தாரிடம் பொதுமக்கள் மனுவை அளித்தனர். அப்போது நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story