பூக்கள் விலை குறைந்தும் வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்


பூக்கள் விலை குறைந்தும் வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்
x

கும்பகோணத்தில் பூக்கள் விலை குறைந்தும் அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பூக்கள் விலை குறைந்தும் அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூ மார்க்கெட்

கும்பகோணம் பெரியகடை தெரு, கும்பேஸ்வரர் கோவில் கீழவீதி, பெற்றாமரை குளத்தின் வட கரை உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், இப்பகுதிகளில் உள்ள கடைகளில் பூ வாங்கி செல்கிறார்கள். திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும்.

விலை குறைந்தும் ஆர்வம் காட்டவில்லை

கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் கும்பகோணம் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. தற்போது முகூர்த்த சீசன் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இதனால் பூக்கள் விலை குறைந்து காணப்பட்டது. இருப்பினும் பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

கடந்த வாரம் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.200-க்கும், பிச்சி பூ, அரளி பூ, ரோஸ் ரூ.100-க்கும் விற்பனையானது. கனகாம்பரம் ரூ.200-க்கு விற்பனையானது.

விளைச்சல் பாதிப்பு

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பூக்கள் வரத்து சரியான அளவில் இருந்தது. இதனால் விலை அதிகம் இல்லாமல் விற்பனையானது. பொதுவாக வெயில் காலங்களில் பூக்கள் நன்றாக பூக்கும், ஆனால் மழைக்காலங்கள் பூக்கள் கருத்துவிடும். இதனால் அதனை வாங்க யாரும் வரமாட்டார்கள்.

கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் விளைச்சல் பாதித்துள்ளது. முகூர்த்தகாலம் இல்லாததால் பூக்கள் விலை குறைந்து காணப்பட்டாலும் அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றனர்.


Next Story