கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் சேவை


கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் சேவை
x

கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் சேவை

திருப்பூர்

மடத்துக்குளம்,

மடத்துக்குளத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பஸ் இயக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் சேவை

மடத்துக்குளம் தாலுகா மைவாடி பிரிவிலிருந்து கணியூர் வரை செல்லும் ரோடு 8 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ரோட்டில் கே. கே. புதூர், மைவாடி, படையாட்சிபுதூர், என்.எல்.சி., செல்வபுரம், செங்கன்டிபுதூர், ஜோத்தம்பட்டி ஆகிய ஊர்களில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த நிறுத்தங்களை சார்ந்த பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இது தவிர சின்னப்பன் புதூர், வேடப்பட்டிபிரிவு, ஜோத்தம்பட்டியிலிருந்து கணியூர் செல்லும் பாதையிலுள்ள தோட்டத்து சாலைகளில் வசிக்கும் மக்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.

இதோடு கணியூரிலிருந்து உடுமலைக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இந்த ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்புகின்றனர். இவ்வளவு பயன்பாடு உள்ள இந்த வழித்தடத்தில் குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமம் உள்ளது.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- காலை தொடங்கி மாலை வரை சில பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. இரவு நேரத்தில் இந்த வழித்தடத்தில் பஸ்கள் இல்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இது தவிர விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வாக கணியூர் மைவாடி வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story