அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு


அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு
x

அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு

திருப்பூர்

தளி

உடுக்கம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற நிர்வாகம் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பெறமுடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

உடுக்கம்பாளையம் ஊராட்சி

உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது உடுக்கம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான எந்த ஒரு அத்தியாவசிய தேவையையும், அரசின் திட்டங்களையும், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி பெறவேண்டி உள்ளது. ஆனால் 100 நாள் வேலை திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடால் ஊராட்சி மன்ற நிர்வாகம் முற்றிலுமாக முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேறுவதில் தடங்கல்கள் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

உடுக்கம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. ஊராட்சி தலைவர் காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் முடக்கப் பட்டதால் வளர்ச்சி மற்றும் சுகாதாரப் பணிகள் முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் பாதிப்பு

இதனால் ஊராட்சி பணிகள் முடங்கி உள்ளதுடன் பொதுமக்களும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடுக்கம் பாளையம் ஊராட்சியில் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

---


Next Story