மக்கள் சங்கமம் மாநாடு


மக்கள் சங்கமம் மாநாடு
x

மக்கள் சங்கமம் மாநாடு

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம், சமூக பாதுகாப்பை வலியுறுத்தி மக்கள் சங்கமம் மாநாடு அரசமரம் பகுதியில் நடைபெற்றது. தாராபுரம் நகர தலைவர் சிக்கந்தர் பாதுஷா தலைமை தாங்கினார். வடக்கு பகுதி தலைவர் சித்திக் வரவேற்றார். இஸ்லாமிய வரலாற்று கண்காட்சியை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் ஜே.எம்.ஜம்பை அப்துல் ஜப்பார் தாவூதி ஹஜ்ரத் தொடங்கி வைத்தார். முன்னதாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொடியை மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநாட்டில் சிறப்புரையாளர்களாக விமன்ஸ் இண்டியா மூவ்மெண்ட் மாநில தலைவர் கே.பாத்திமா கனி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் உ.தனியரசு, தமிழ்நாடு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொது செயலாளர் மவுலவி கே.அர்ஷத் அஹமது அல்தாபி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில துணை தலைவர் ஏ.ஹாலித் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியில் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உயிர்கள், உடமைகள், உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நாடாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Next Story