ஆனையூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்


ஆனையூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
x

ஆனையூர் பஞ்சாயத்து அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் கட்டளைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பெண்கள் கழிவறை கடந்த சில மாதங்களாக போதிய பராமரிப்பு இன்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாதநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு பல முறை கிராம மக்கள் சார்பில் புகார் தெரிவித்தும் உரிய பராமரிப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் நேற்று திடீரென பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தங்கள் பகுதியில் செயல்படாமல் உள்ள பெண்கள் கழிவறையை உடனே பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, பஞ்சாயத்து தலைவர் (பொறுப்பு) முத்துமாரி, பஞ்சாயத்து செயலர் நாகராஜன் ஆகியோர் கட்டளைப்பட்டி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அப்போது ஒரு மாதத்தில் அந்த கழிவறையை பராமரித்து தருவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story