டிப்பர் லாரியை பறிமுதல் செய்யக்கோரி இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் முற்றுகை


டிப்பர் லாரியை பறிமுதல் செய்யக்கோரி இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் முற்றுகை
x

மேல்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரியை பறிமுதல் செய்யக்கோரி போலீஸ் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

மேல்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரியை பறிமுதல் செய்யக்கோரி போலீஸ் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் சார்பில் கூறப்படுவதாவது:-

மோட்டார் சைக்கிள் மீது மோதல்

வேலூர் மாவட்டம், மேல்பாடி அருகே உள்ள மேல்காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் பூபாலன் (45), தங்கவேல் (59). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சின்ன பெருமாள்குப்பம் சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஏரி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று பூபாலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பூபாலன் பின்புறம் அமர்ந்து சென்ற தங்கவேல் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்ஸ்பெக்டரை முற்றுகை

இது குறித்து விசாரிப்பதற்காக பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் விபத்து நடைபெற காரணமாக இருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் இன்ஸ்பெக்டரை முற்றுகையிட்டனர். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மேல்பாடி போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரை திடீரென்று முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story