பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது வார்டு பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீரில் உப்பு தண்ணீரை கலந்து வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் உடல் நிலை பாதிக்கப்படுவதாகவும், கலப்படம் இல்லாமல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று வ.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தாமிரபரணி குடிநீரை மட்டும் தனியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story