வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தெள்ளாரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி அருகே சு.காட்டேரி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெள்ளாரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story