ரேஷன்கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியல்


ரேஷன்கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியல்
x

நாட்டறம்பள்ளி அருகே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆக்கிரமிப்பு

நாட்டறம்பள்ளி தாலுகா லட்சுமிபுரம் பகுதியில் ரேஷன் கடை தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதன் அருகே அரசுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தை மீட்டு அதில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று லட்சுமிபுரம் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி திறக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story