குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

குடியாத்தத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடியாத்தம் நகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பராமரிப்பு பணிகளுக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பசுமாடு நீரேற்று நிலையத்திலிருந்து குடியாத்தம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

பல இடங்களில் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை குடியாத்தம் பிச்சனூர் மேல் சுதந்திர வீதியைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கூறி காலி குடங்களுடன் குடியாத்தம் பலமநேர்ரோடு அரசமரம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் யுவராஜ், நகர மன்ற உறுப்பினர் ஏகாம்பரம், நகராட்சி குழாய் பொருத்துனர் குமரேசன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவிரி கூட்டு குடிநீர் சப்ளை கடந்த 2 நாட்களாக சீடைந்து வருவதாகவும் இரவுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.



Next Story