குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தா.பேட்டை அருகே திருத்தலையூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் திருத்தலையூர் கிராமத்திற்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் மனோகரன், ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story