ஓமலூர் அருகே சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


ஓமலூர் அருகே சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

ஓமலூர் அருகே சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

கருப்பூர்:

ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி 4-வது வார்டு மற்றும் பச்சனம்பட்டி ஊராட்சி 8-வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை கூட்டுறவு சங்கம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story